வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தேர்தல் அதிகாரி தகவல்


சென்னை, செப்.21- வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 944 பிரவுசிங் சென்டர்களுடன் தேர்தல் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயரை சேர்க்கவே, முகவரியை மாற்றம் செய்யவோ பிரவுசிங் சென்டர்களில் சென்று மாற்றம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். 

மேலும், ஏற்காடு இடைத் தேர்தலை வரும் அக்.16-ந் தேதிக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி