சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வியில் உள்ள அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவு இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதே இணையதளத்தில் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு விண்ணப்பிக்க 17–ந் தேதி கடைசி நாள்.
இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் கோட்டீஸ்வர பிரசாத் தெரிவித்துள்ளார்.