இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் தெளிவான ஆய்வறிக்கை ஒன்றை தயார் செய்ய 18 பேர் கொண்ட குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது.மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் கே. விஜய் ராகவன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். தாண்டவன் உள்பட 18 பேர் இடம்பெற்றுள்ளனர்.இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் உலகத் தரத்துக்கு இணையாக ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில், இப்போது நடைமுறையில் உள்ள ஆராய்ச்சி நிதித் திட்டங்கள் குறித்து இக்குழு ஆய்வு செய்து, நிதியை உயர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளும்.மேலும், கல்வி நிறுவனங்களிடையே ஆராய்ச்சி மேம்பாட்டில் போட்டியை உருவாக்கும் வகையில் ரேங்க் சிஸ்டத்தை அறிமுகம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆராய்ந்து மூன்று மாதங்களில் மத்திய அரசிடம் இக்குழு அறிக்கையை சமர்ப்பிக்கும்.