திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தந்தை இறந்து விட்டால், கருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை வழங்கவேண்டும். இதில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தந்தை மரணம் வேலூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது தந்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஆய்வாளராக பணியாற்றினார். பணியில் இருந்தபோது, 2011–ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். இதையடுத்து, தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜெயலட்சுமி மனு அனுப்பினார்.


இவரது மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், ‘தந்தை மரணமடையும்போது, ஜெயலட்சுமிக்கு திருமணமாகி விட்டது. எனவே அவருக்கு வேலை வழங்கமுடியாது’ என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:– தந்தை இறந்து விட்டால், திருமணமான மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. அதனால், திருமணமான மகளுக்கு வேலை வழங்க முடியாது என்று அதிகாரிகளால் கூறமுடியாது. பாகுபாடு கூடாது 2007–ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின்படி, வயதான காலத்தில் பெற்றோரை மகன், மகள் பாதுகாக்கவேண்டும். இதில், மகன் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும் என்று இல்லை.பெற்றோரை பாதுகாப்பது மகன், மகள் ஆகியோரது கடமை என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.


அங்கு பாலியல் ரீதியான பாகுபாடு பார்க்கப்பட வில்லை. எனவே தந்தை இறந்தால், திருமணமான மகளும் கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உள்ளது. இதில் மகள், மகன் என்ற பாகுபாடு பார்க்க கூடாது.எனவே விஜயலட்சுமிக்கு கருணை அடிப்படையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வேலை வழங்கவேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி