கம்பியூட்டர் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8.1 தொகுப்பினை வெளியிடுகிறது. ஆனால், இணையத்திலிருந்து அக்டோபர் 17 முதலே டவுண்லோட் செய்து கொள்ளலாம்.விண்டோஸ் ஸ்டோரில், டிஜிட்டல் பார்மட்டிலும், கடைகளில் சிடி யாகவும் இது கிடைக்கும்.முதல் முதலாகத் தான் வெளியிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் (விண்டோஸ் பல வகையான முழுமையான மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டு, புதிய பதிப்பாக விண்டோஸ் 8.1 ஐ மைக்ரோசாப்ட் தருகிறது.இது ஏற்கனவே விண்டோஸ் 8 வைத்திருப்பவர்களுக்கு, முற்றிலும் இலவசமாகும். மைக்ரோசாப்ட் நிறுவனம், பல விஷயங்களை முதல் முதலாக இதில் மேற்கொண்டுள்ளது.விண்டோஸ் 8.1 தொகுப்பில்தான் முதல் முதலாக மைக்ரோசாப்ட் புதிய வசதிகளை இலவசமாக அமைத்துத் தருகிறது.இதுவரை, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருந்த தவறுகளை நீக்கும் பேட்ச் பைல்களைத்தான் மைக்ரோசாப்ட் தந்துள்ளது. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எண்ணப்போக்கிலும், செயல்முறை யிலும் ஏற்பட்ட நல்லதொரு மாற்றமாகும்