இணையத்தில் ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விண்டோஸ் 8 க்கான IRCTC ன் புதிய அப்ளிகேஷன்..!

IRCTC என்பது இந்தியாவின் முன்னணி e-commerce வலைத்தளமாகும். IRCTC என்பதின் ஆங்கில விரிவாக்கம் Indian Railway Catering Tourism Corporation என்பதாகும். இத்தளத்தின் மூலம் இணையம் வழியாக ரயில் மற்றும் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். மாதம் ஒன்றிற்கு சராசரியாக 12 மில்லியன் மக்கள் இத்தளத்தை விமான மற்றும் ரயில் போக்குவரத்து முன்பதிவிற்காக அணுகிறார்கள். 

மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய சர்வரை இது பயன்படுத்தி நாளொன்றிற்கு 4.15 லட்சம் பயணச்சீட்டுகளை விநியோகிக்கிறது. தற்பொழுது இந்நிறுவனம் விண்டோஸ் 8 சாதனங்களுக்கான புதிய அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. 

irctc-launched-new-app-for-windows-8-smartphone-tablet-pc
விண்டோஸ்8க்கான IRCTC ன் புதிய அப்ளிகேஷன்


இந்த அப்ளிகேஷனை  விண்டோஸ்8 கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம். இப்புதிய அப்ளிகேஷனைப் பயன்படுத்தி Ticket Booking செய்வதோடு

  • PNR status
  • Train Schedules
  • Train Router
  • Availability of tickets
  • Booking History
  • Cancellation

போன்ற அடிப்படை விபரங்களையும் பெற முடியும். கூடுதலாக Quick Booking, Preferences, Favourites, Recent History, Live Notifications, Frequent Passenger Info ஆகிய வசதிகளையும் பெற முடியும். 

இப்பயனுள்ள அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய

விண்டோஸ் 8 கம்ப்யூட்டருக்கான சுட்டி: Download App for Windows 8 pc

விண்டோஸ்8 ஸ்மார்போனுக்கான சுட்டி:  Donwload apps for windows 8 smartphones

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி