இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு, இறுதி தீர்ப்பு வரும் வரை பணி மாறுதல் & நேரடி நியமனமும் நிறுத்தி வைப்பு -சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வின் முன் இன்று பிற்பகல் 3.45மணிக்கு விசாரணைக்குவந்தது. போதிய நேரமின்மை காரணமாக இரு தரப்பும் செய்துகொண்ட சமரசத்தை அடுத்து நீதிபதிகள் வருகிற அக்டோபர் மாதம் 7ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும் அன்றைய தினமே வழக்கை முடித்து கொள்ள அனைத்து தரப்பும் ஒத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவரை பணி மாறுதல்கள் & நேரடி நியமனமும் மேற்கொள்ள கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி