7-வது சம்பள கமிஷன் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி


புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்த்த 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சி்ங், அறிவித்து உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதிஅமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடையப்போகிறார்கள். தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு என எதிர்‌க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.


2016-ல் அமலுக்கு வரும்
6-வது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள், 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன் மூலம் அப்போதைய நிலவரப்படி 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைந்தனர். இந்நிலையில் 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். இது குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 7-வது சம்பள கமிஷன் குழுவின் தலைவர்,உறுப்பினர்கள் பெயர் குறித்த விவரம் விரைவி்ல் வெளியிடப்படும். இதற்கான பரிந்துரைகள் அமல்படுத்த 2ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும். (2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும்) இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர் என்றார்.

தேர்தல் ஆதாயம்
இந்தாண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்களும், அடுத்த ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தலும் வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு திடீரென 7-வது சம்பள கமிஷனை அறிவித்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்ப அதி்ர்‌ச்சி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ,வரப்போகும் பொதுத் தேர்தலை மனதில் வைத்து தான் என எதிர்‌க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன்:
இதற்கி‌டையே நாட்டின் முதல்முறையாக ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ உயரதிகாரிகள், தங்களது சம்பள பிரச்னை குறித்து மத்திய அரசிடம் முறையிட்டனர். இதில் 6-வது சம்பள கமிஷனின் கோரிக்கை குறித்து வலியுறத்தினர். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7-வது சம்பள கமிஷனுடன், முதன்முறையாக ராணுவத்தினருக்கான சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுளளது.
Seventh Pay Commission for Central Staff announced - 26/09/2013
FM: Prime Minister Approves the Constitution of Seventh Central Pay Commission; Recommendations are Likely to be implemented with effect from 1st January, 2016


The Finance Minister Shri P.Chidambaram in a statement said here today that the Prime Minister has approved the constitution of the Seventh Central Pay
Commission.
The fourth, fifth and sixth Central Pay Commissions’ recommendations were implemented as follows:


4th CPC 1.1.1986
5th CPC 1.1.1996
6th CPC 1.1.2006


The average time taken by a Pay Commission to submit its recommendations has been about two years. Accordingly, allowing about two years for the 7th CPC to submit its report, the recommendations are likely to be implemented with effect from 1.1.2016.


The names of the Chairperson and members as well as the terms of reference (ToR) of the 7th Pay Commission will be finalised and announced shortly after consultation with major stakeholders.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி