திருக்குறள் ஓர் அறிவியல் நூல்: உங்களோடு ஒர் ஆய்வு - 7

நண்பரோடு பேசுகையில் அவர் கூறியது, திருக்குறள் அனைவருக்கும் எக்காலத்திலும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்றார்.

உண்மை தானே. பொருந்தும் வகையில் எனில் அது வாழ்வின் அடிப்படை கூறுகளை உண்மை நிலை (State of Nature) மாறாத வண்ணம் உணர்ந்து எழுதப்பட்டுள்ளது.
இங்கு நாம் சிந்திக்க வேண்டியது. இங்கு நம் உடல் அறிவியல் (இயற்கை) தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்குகிறது. மனமும் அதை ஒட்டியே அறிவியல் முறையிலேயே இயங்குகிறது. அதன் எண்ணங்களும் அப்படியே. 

இதையெல்லாம் ஆய்ந்து உணர்ந்த மெய் ஞானிகள் அதை இயம்ப போதிய வார்த்தைகள் இன்றி, அன்றைய நிலையில் இருந்த சொற்களைக் கொண்டு விளக்கினர். இதனை நாம் ஆன்மீகம் என குறுக்கிவிட்டோம்.

உண்மையில் பிறப்பிற்கு முன், பிறப்பிற்கான காரணம், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள வாழ்வு, இறப்பிற்கு பின், வீடு பேறு என்பன அனைத்தும் மாற இயற்கை நீதியின் இயக்க விதிகளே. 

இந்த விதிகளை சீராக முழுமையாக அறிய முழுமையான பேர் அறிவு மனிதனிடம் ஓங்க வேண்டும். இதற்காகத் தான் Pituitary, hypothalamus முதல் அனைத்து சுரப்பிகள் மீதும் மன ஆற்றலை செலுத்தி அவற்றை ஊக்கி உடல் , மூலை பொன்ற அனைத்தின் அணுச்சிதைவுகளையும் சீர்ச்செய்து அறிவின் முழுமையை பெற்றனர். 


இவ்வாறு பெற்ற அறிவைக் கொண்டு மனித வாழ்விற்கு அதன் முந்தைய விலங்கினப்பதிவுகளான கடும்பற்று, பேராசை, வஞ்சம், சினம், முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை தேவையற்றது மற்றுமின்றி அவசியமற்றது பலனற்றது என்பதையும். ஒழுக்கம், அறம் போன்றவற்றை வகுத்து வைத்தனர்.

அறிவின் தெளிவின்மையே மேற்கூறிய பிழைகளுக்கு காரணமாகிறது. அறிவு தெளிவு பெற அது பலம் பெற வேண்டும். இவ்வாறு பலம் பெற்று வாழ்வின் கூறுகளை ஆய்ந்து, வாழ்வின் அர்த்தம், நோக்கம் , அதன் செயல்முறைகளை விளக்குவதே திருக்குறள். உண்மையில் அதில் உள்ள அத்தனையும் அறிவியல் கூறுகளே. அதை அறிவியல் படுத்தி பார்க்க இன்னும் அறிவியல் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். 

உண்மையில் வாழ்க்கையை அதன் இயங்கு நியதியை விளங்கிக்கொள்வது வெகு எளிது. ஆனால் அதை உணர அந்த இயற்கைக்கு ஒத்த தன்மையில் இந்த உயிரும், உடலும் , உள்ளமும் பலம் பெற்று இயங்க வேண்டும். 

அறிவியல் தன் ஆராய்வை குறுகிய அளவில் மட்டுமே செய்கிறது. என்று தன் பாதையை ஆன்மீகம் நோக்கி செலுத்துகிறதோ, அப்போது அனைத்து இயக்க விதிகளும் ஒன்று தான் என்பதை அறிவிப்பதோடு, அனைத்தும் ஒன்று தான் என்பதயும் மயக்கம் கலைந்து அறிவிக்கும். 

வாழ்க வளமுடம்! வாழ்க வையகம்!!

ச.பிரகாசம்

Courtesy : http://teachertamilnadu.blogspot.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி