நவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கை

மத்திய அரசின் கீழ் செயல்படும் வித்யா சமிதி பள்ளியில் 6ம் வகுப்பு சேர்வதற்கு நடைபெறும் நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: தற்போது 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்: ஆந்திரா, கர்நாடகா, கேரளா & புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும்.

தேர்வு முறை: ஆப்ஜெக்டிவ் மாதிரியில் 2 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 50 மதிப்பெண்களுக்கு Mental Ability, 25 மதிப்பெண்களுக்கு Arithmetic, 25 மதிப்பெண்களுக்கு Language Streams-ல் கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பப் படிவங்கள் www.navodaya.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அக்டோபர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.பிப்ரவரி 8ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறுகின்றது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி