பழநி கோயிலில் காலியாக உள்ள பொறியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் செப்.,30 க்குள் விண்ணப்பிக்கலாம் என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழநி கோயிலில் 200க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. முதற்கட்டமாக மெக்கானிக், சிவில், எலக்ட்ரானிக் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவிப் பொறியாளர், போர்மென்கள் போன்ற ஒன்பது பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
கல்வித் தகுதியாக, அந்தந்த பிரிவுகளில் டிப்ளமோ அல்லது பி.இ., முடித்திருக்க வேண்டும். செப்.,30 விண்ணப்பிக்க கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு கோயில் இணை ஆணையர், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் அலுவலகம், பழநி - 624 601. 04545- 242 236. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.