பொது தமிழ்-பள்ளி பாடப் புத்தகம்,ஒரு வழிகாட்டி நூல்,நாம் வெளியிட்ட நூலையும் பார்க்கலாம். வரலாறு- தமிழக வரலாறு-பழைய பாட நூல் 6-7,பண்டைய வரலாறு,இடைக்கால வரலாறு-பள்ளி சமச்சீர் பாடப் புத்தகம்,ஆங்கிலத்தில் Arihant புத்தகம் படிக்கலாம்.
நவீன வரலாறு-+2புத்தகம்,பழைய பத்தாவது வரலாறு பாடப்புத்தகம்.
புவியியல்-சமச்சீர் ஆறு முதல் பத்து வரை போதும்,அதில் படித்தால் குருப் ஒன்று வரை தேரலாம்.
அரசியல்-ஆறு முதல் பத்து வரை சமச்சீர் புத்தகத்தில் உள்ள குடிமையியல் பகுதி தான் பாடப் பகுதிகள்,பின் +1,+2 வில் உள்ள அரசியல் அறிவியல் படியுங்கள்,ஆங்கிலம் வாசிக்க முடிந்தால்
Indian Polity by Laxmikanth படியுங்கள்.
பொருளாதாரம் பள்ளி சமச்சீர் பாடப் பகுதியில் உள்ள பொருளாதாரம் படியுங்கள்,+1 பொருளாதாரம் படியுங்கள்,+1,+2 வணிகவியல் படியுங்கள்.இது தவிர்த்து பணவீக்கம்,வங்கி விலை கட்டுப்பாடு முறைகள்,வங்கியின் பணக் கொள்கை,அரசின் நிதிக் கொள்கை போன்ற தற்கால செய்திகளை படியுங்கள்.
அறிவியல் பாடத்தை பொறுத்தவரை பள்ளி பாடப் புத்தகம் போதும்.
கணித திறனாய்விற்கு சக்தியின் வெளியீடு நன்றாக உள்ளது,நான் அதை தான் படிக்கிறேன்.
மேற்கண்டவற்றை படித்து தற்கால செய்திகளுக்கு கடந்த ஆறு மாத செய்திகள் பார்த்தால் நீங்கள் தான் குருப் இரண்டின் முதல் மாணவர்.
வெற்றி பெற ஆண்டவனை வேண்டும்
சோ.பார்த்தசாரதி.
Courtesy : http://tntam.blogspot.in/