மாவட்ட மாறுதலில் இனி வரும் காலங்களில் எல்லா இடைநிலை ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம்.நான்கு ஆண்டுகளாக கண்ட கனவு பலித்தது.உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையியல் இடைக்கால உத்தரவில் உள்ள 2009 க்குப்பிறகு பணி நியமனம் பெற்ற சுமார் 17000 இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதலுக்கான செல்லக்கூடாதென இருந்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.
SSTA தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
2009 ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்றவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக மாறுதல் பெற வழிவகை இல்லாமல் தவித்த தென்னாட்டு ஆசிரியர்களின் இனி தமிழகம் முழுவதும் மாறுதல் பெறலாம்.
வழக்கை உச்சநீதிமன்றம் வரை விடாப்பிடியுடன் கொண்டு சென்று வெற்றிவாகை சூடிய SSTA பொறுப்பாளர்களின் மன உறுதியை பாராட்டுகிறது