அக்.18 முதல் 23 வரை ராமநாதபுரத்தில் விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு: இலவசமாக எழுத்துத்தேர்வு பயிற்சி

ராமநாதபுரத்தில் வரும் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை விமானப்படை ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.இப்பணிக்குரிய எழுத்துத்தேர்வுக்கான முன்பயிற்சி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட இருப்பதாகவும் ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரத்தில் விமானப்படைக்கான ஆட்சேர்ப்பு முகாம் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இம்முகாமில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிகமாக கலந்து கொண்டு விமானப்படையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத் தேர்வுக்கான முன்பயிற்சி நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெற விரும்பும் தகுதியுள்ள இளைஞர்கள், உதவி இயக்குநர்,முன்னாள் படைவீரர் நலன்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,ராமநாதபுரம் அவர்களுக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் அக்டோபர் மாதம் முதல் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 04567-230045 மற்றும் 8300192211 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

12 ஆம் வகுப்பு தேர்ச்சியும் ஆங்கிலம்,கணிதம்,இயற்பியல்,வேதியியல் பாடங்களில் 50 சதவிகிதத்துக்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.வயது 17 முதல் 20க்குள் இருப்பவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி