செப்டம்பர் 16 முதல் தமிழில் ஹிந்து!

ஹிந்து ஆங்கிலப் பத்திரிகைக்கு ஒரு வரலாறு உண்டு. அது மிகவும் வெற்றிகரமரமான வரலாறு. 1878-ல் வாரப்பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது த ஹிந்து. அப்போது எண்பதே எண்பது பிரதிகள் மட்டும் அச்சடிக்கப்பட்டன. ஒரு ரூபாய் 12 அணா கடன் வாங்கித்தான் முதல் பிரதி அச்சடித்தார்கள். 1883-ல் வாரம் மூன்றுமுறை வெளிவந்தது. 1889-ல் மாலை தினசரியாக மாறியது. இன்று அது சராசரியாக தினமும் 14 லட்சம் பிரதிகள் அச்சாவதாகச் சொல்கிறார்கள்.


இந்த குழுமத்திலிருந்து தமிழில் ஏதாவது ஒரு பத்திரிகை ஆரம்பிக்கவேண்டும் என்று வெகுநாட்களாகச் சொல்லப்பட்டுவந்தது. பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னையில் பதிப்பு தொடங்கிய பின்னர்தான் ஹிந்து நிர்வாகம் தமிழ்நாட்டின் பக்கம் கொஞ்சம் பார்வையை அகலமாகத் திறந்தது. நாம் பலமாக இருக்கும் கோட்டையை எளிதாக வெளியிலிருந்து வருபவர்களுக்குக் கொடுத்துவிடக்கூடாது என்ற அக்கறை. அத்துடன் இந்தியா முழுக்க இப்போது பிராந்திய விளம்பரங்கள் மீது ஊடக நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா சென்னைக்கு வந்த வேகத்தில் உள்ளூர் விளம்பரங்களை வாரியதுடன் தமிழிலும் ஒரு செய்தித்தாள் ஆரம்பிக்கலாமே என்று ஆய்வு செய்துவருகிறது.


ஆகவே தமிழில் ஒரு பத்திரிகையைக் கொண்டுவந்தால் நன்றாகப் போகும் அத்துடன் டைம்ஸ் ஆப் இந்தியாவை முந்திக்கொண்டதுபோலும் ஆச்சு என்ற எண்ணத்துடன் ஹிந்து நிறுவனம் களமிறங்கி உள்ளது. ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த கே.அசோகன் தலைமையில் இளம் பத்திரிகையாளர்கள் இரவும் பகலுமாக பணி புரிந்து வருகிறார்கள். தமிழ் பத்திரிகைக்கென்று தனியாக அண்ணாசாலையில் ஓர் அலுவலகமும் தொடங்கி உள்ளார்கள்.


ஆறுமாதத்துக்கு ஹிந்து தமிழ் பேப்பருக்காக 375 ரூபாய் கட்டுங்கள் என்று சொல்லி பல இளைஞர்கள் வீடு வீடாகப் போய் சந்தா வசூலிக்கிறார்கள்.


தமிழ் செய்தித்தாள் ஹிந்து என்ற பெயரில் வருமா காமதேனு என்ற பெயரில் வருமா? என்றால் அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். அனேகமாக ஹிந்து என்ற பெயரிலேயே வரக்கூடும்.


செய்திகள், செய்தி சார்ந்த கட்டுரைகள், தரமான இலவச இணைப்புகள் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கிலப் பத்திரிகையைப் போலவே தரமாக இருக்கவேண்டும். அதே சமயம் தமிழ்நாடு சார்ந்த பார்வையும் இருக்கவேண்டும் என்பது வாசகர்களின் எதிர்பார்ப்பு. இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி