டிப்ளமோ நர்சிங் படிப்பு: 16ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்.


டிப்ளமோ நர்சிங்" படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம், 16ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் வரை உள்ளன. இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம், 16ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வு நடக்கிறது. இதற்கான கால அட்டவணை, தர வரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களை www.tnhealth.org,www.tn.gov.in என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி