விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பள்ளியின் வளர்ச்சிக்காக பணியாற்றிய ஆசிரியர்கள் 16 பேருக்கு நல்லாசிரியர் விருது பெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் விருதுநகர் மாவட்டத்தில் இந்த விருது பெற அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் விவரம் வருமாறு:சித்ரா(முதல்வர்)-சிவகாசி கே.சி.ஏ.டி தர்மராஜ் நாடார்-தாயம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூ.ஆஞ்சலோ தெக்லாமேரி(உதவி ஆசிரியை)- செவல்பட்டி, அமலா தொடக்கப்பள்ளி, ம.ஜெயபால்(தலைமை ஆசிரியர்)-சிவகாசி மேற்கு ஏவிடி நகராட்சி தொடக்கப்பள்ளி, ரா.நாடியம்மாள்(தலைமை ஆசிரியை)- அலமேலுமங்கைபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இரா.ராமசாமி(தலைமை ஆசிரியர்)-தூங்கரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜெ.ஆனந்தராஜா(தலைமை ஆசிரியர்)-வீரசோழன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மா.பொன்னுச்சாமி(தலைமை ஆசிரியர்)-செங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பா.கிரேஸ்(தலைமை ஆசிரியை)-கடமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அ.கமலாராணி(தலைமை ஆசிரியை)-டி.செட்டிக்குளம்,விருதுநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சு.செல்வின்ஜெயக்குமார்(தலைமை ஆசிரியை)-தெற்குவெங்காநல்லூர், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மு.வரதராஜபாண்டியன் (தலைமை ஆசிரியர்)-கூமாபட்டி அரசுமேல்நிலைப்பள்ளி, பொ.சாந்தகுமாரி (தலைமை ஆசிரியை)-சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி, சி.ஜமுனாராணி (தலைமை ஆசிரியர்)-விருதுநகர் ஹவ்வாபீவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெ.வரதராஜாபெருமாள் (முதுகலை ஆசிரியர்)-விருதுநகர் ஹாஜிபி மேல்நிலைப்பள்ளி, டேவிட்ஞானசேகரன்(உடற்கல்வி ஆசிரியர்)-ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி, வையனன்(உடற்கல்வி ஆசிரியர்) ராமநாயக்கன்பட்டி ஆர்.வி.கே உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 6 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1 மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர், 3 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 2 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 1 உதவி ஆசிரியை என மொத்தம் 16 பேருக்கு நல்லாசிரியர் விருது பள்ளிக் கல்வி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னையில் சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி.மேல்நிலைப்பள்ளி கலையரங்க வளாகத்தில் வருகிற 5ம் தேதி ஆசிரியர் தினவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைசச்ர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருது, பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.10 ஆயிரத்திற்கான பணமுடிப்பு உள்ளிட்டவைகளும் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.