147 கிராம ஊராட்சிகளில் 16,726 துப்புரவு பணியாளர்களை நியமிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தற்பொழுது ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை, அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இல்லாமல் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. எனவே தமிழகம்முழுவதும் தூய்மை கிராம இயக்கத்தினை நன்முறையில் செயல்படுத்த மக்கள் தொகை 3,000க்கும் கீழ் உள்ள 8,469 கிராம ஊராட்சிகளில், ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கு கூடுதலாக ஒன்று வீதமும், 3,001 முதல் 10,000 வரை உள்ள 3,908 கிராம ஊராட்சிகளில், ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கு கூடுதலாக இரண்டு வீதமும், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 147கிராம ஊராட்சிகளில், ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் கூடுதலாக மூன்று வீதமும், ஆக மொத்தம் 16,726 துப்புரவு பணியாளர் பணியிடங்களை கூடுதலாக ஏற்படுத்திட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

புதியதாக உருவாக்கப்படும் பணியிடங்களில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக2,000 ரூபாயும், அகவிலைப் படியாக 40 ரூபாயும் வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 41 கோடியே 81 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்" என்று கூறப்பட்டுள்ளது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி