தமிழகத்தில் 1.32 கோடி பி.எப்., கணக்குகள் ஆன்-லைன்

தமிழகத்தில், 1.32 கோடி பி.எப்., சந்தாதாரர்கள், தங்களது கணக்கு இருப்பை, ஆன்-லைனில் அறிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் உள்ள, பி.எப்., சந்தாதாரர்கள், கணக்கு இருப்பை, ஆன்-லைனில் அறிந்து கொள்ளும் வசதி, கடந்த வாரம் துவங்கப்பட்டது. இதற்கு, மண்டல வாரியாக, இணையதள முகவரி வெளியிடப்பட்டு உள்ளது.

இணையதளங்களில் தமிழக சந்தாதாரர்கள், www.epfochennai.tn.nic.in, www.epfotamilnadu.tn.nic.in, ஆகிய முகவரிகளில் அறியலாம். நடப்பு தேதி வரையிலான இருப்பை அறிந்து கொள்ள, இந்த இணையதளங்களில் உள்ள "பாஸ் புக்' என்ற பகுதியை அணுகலாம்.

பி.எப்., கணக்கை, ஆன்-லைனில் வெளியிட்டதன் மூலம், பி.எப்., கணக்கு முதிர்வு தொகையைப் பெறுதல், கடன் பெறுதல், வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளுதல் போன்றவற்றையும், ஆன்-லைன் மூலம் செய்யும் பணியையும், பி.எப்., அலுவலகம் மேற்கொண்டு உள்ளது.

காத்திருக்க தேவையில்லை

இதற்காக, வேலை அளிப்போரின் தகவல்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரின் கையொப்பம் ஆகியவற்றை, ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி, தற்போது நடந்து வருகிறது. இனிமேல், தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியப் பலனைப் பெற, காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது.

ஓய்வு பெற்ற நாளிலிருந்து, 30 நாட்களுக்குள், பி.எப்., தொகையை அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அதற்கு முன்னரே பி.எப்., தொகையை அளிக்க, பி.எப்., அலுவலகங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக, நிறுவனங்கள் மூடப்படுகின்றன. 

தொழிலாளர்களின் எண்ணிக்கையை பல நிறுவனங்கள் குறைத்தும் வருகின்றன. இதனால், கணிசமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் எழுந்துள்ளது.
தமிழகத்தில், ஆட்டோமொபைல், ஆயத்த ஆடை தொழில், கணினி மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளன. இவற்றிலிருந்து, கணிசமான தொழிலாளர்கள் வெளியேறி உள்ளனர்.

இதுகுறித்து, பி.எப்., ஆணையர் பிரசாத் கூறியதாவது:
ஆண்டுதோறும் தொழிலாளர்கள் வெளியேறுவதும், புதிய தொழிலாளர்களுக்கு பி.எப்., கணக்கு துவங்குவதும், வழக்கமான ஒன்று. பொருளாதார நெருக்கடியில், பல நிறுவனங்களில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இத்தொழிலாளர்கள், வேறு தொழில்களில் சேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு, பி.எப்., பிடித்தம் செய்வது கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களுக்கு, பி.எப்., பிடித்தம் செய்யும் நிறுவனமாக இருந்தால் மட்டுமே, மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் டெண்டரில் பங்கேற்க முடியும். எனவே, பதிவு செய்த கட்டுமான நிறுவனங்களில், பி.எப்., பிடித்தம் செய்யப்படும்.

நிரந்தர பி.எப்., எண்

ஒவ்வொருவருக்கும் ஒரு நிரந்தர பி.எப்., எண் உருவாக்கும் பணியை மேற்கொண்டு உள்ளோம். இதற்கான, அடிப்படை வேலைகள் நிறைவடைந்ததும், நிரந்தர பி.எப்., எண் உருவாக்கப்படும். 

இதன்மூலம், எந்த நிறுவனத்தில் வேலைக்கு சென்றாலும், பி.எப்., பிடித்தம் செய்ய ஏதுவாக இருக்கும். பி.எப்., பிடித்தம் செய்தும், அதை செலுத்தாத நிறுவனங்களுக்கு, நிலுவையில் உள்ள காலத்துக்கு வட்டியும், அபராத வட்டியும் விதிக்கப்படுகிறது. பல நிறுவனங்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு, பிரசாத் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள, பி.எப்., சந்தாதாரர்கள், கணக்கு இருப்பை, ஆன்-லைனில் அறிந்து கொள்ளும் வசதி, கடந்த வாரம் துவங்கப்பட்டது. இதற்கு, மண்டல வாரியாக, இணையதள முகவரி வெளியிடப்பட்டு உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி