தகவல் பெறும் உரிமை சட்டம் விண்ணப்பிக்க ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் அஞ்சல் துறை விரைவில் விற்பனை

தகவல் பெறும் உரிமை சட்டம் விண்ணப்பிக்க ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் அஞ்சல் துறை விரைவில் விற்பனை


திருச்சி : மத்திய தகவல் ஆணையம் அஞ்சல் துறைக்கு அனுப்பியுள்ள உத்தரவில், தகவல் பெற விரும்புவோர் தாங்கள் அனுப்பும் விண்ணப்பத்தில், அஞ்சல் துறை புதிதாக வெளியிடும் ரூ.10 ஆர்டிஐஸ்டாம்ப் ஓட்டி அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தபாலில் அனுப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யும்படி குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுமார் 1.50 லட்சம் அஞ்சல் துறை அலுவலகங்களில் இதற்காக சிறப்பு கவுன்டர்கள் விரைவில் திறக்கப்படும் என்று அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆர்டிஐ விண்ணப்பங்களை தபால் நிலையங்களே பெற்று சம்பந்தப்பட்ட துறைகளு க்கு விரைவாக அனுப்ப ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவி த்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி