HISTORY of Coimbatore - கோயம்புத்தூர் வரலாறு


கோயம்புத்தூர் மாவட்டம் பண்டைய காலம் தொட்டு கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது.இதன்  வரலாறு சங்ககாலம் முதலே அறியப்படுகிறது.பழங்காலத்தில் இப்பகுதி பழங்குடியின வசிப்பிடமாக இருந்துள்ளது.அவர்களில் மிகுந்த வலிமையான, பெரும்பான்மையான கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர்.இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது. ஆயினும் இப்பழங்குடிகளின் ஆதிக்கம் நீண்ட காலம் நீடித்து இருக்கவில்லை.இப்பகுதி இராஷ்டிரகுட்டர்களின் படையெடுப்பால் அவர்களின் வசமானது.இராஷ்டிரகுடர்களிடமிருந்து சோழர்களின் பொற்காலம் எனப் போற்றப்படும் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கைகளிலிருந்து வீழ்ந்தது. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் கொங்கு மண்டலம் சாளுக்கியர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னால் வந்த பாண்டியர்களாலும், ஹோசைலர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டது.பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட உள்நாட்டு சண்டையினால் இப்பகுதி டில்லி முகலாயர்களிடம் வீழ்ந்தது. பின்னர் மதுரை சுல்தான்களிடமிருந்து விஜய நகர ஆட்சியாளர்கள் 1377 - 78ல் இப்பகுதியை போரிட்டு வென்றனர். சில காலம் இப்பகுதி நாயக்கர்களின் சுதந்திரமான கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது.


முத்து வீரப்ப நாயக்கரின் ஆட்சிக் காலம் மற்றும் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்ட உள் நாட்டு சண்டை, விட்டு விட்டு வந்த போர்களினாலும் விஜய நகர பேரரசு அழிவதற்கு காரணமானது. இதன் விளைவாக திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கொங்கு மண்டலம் மைசூர் ஆட்சியர்களின் கைகளில் விழுந்தது, அவர்களிடமிருந்து ஹைதர்அலி இப்பகுதியை கைப்பற்றினார். ஆயினும் 1799ல் மைசூரில் திப்பு சுல்தானுக்கு ஏற்ப்பட்ட வீழ்ச்சியினால் கொங்கு மண்டலம் மைசூர் மகாராஜாவால் கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இதற்கு கைம்மாறக திப்பு சுல்தானிடம் இழந்த இராஜ்ஜியத்தை மீண்டும் மைசூர் மகாராஜாவிற்கே பிரிட்டிஷார் வழங்கினர். அதிலிருந்து 1947ல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை கோவை மண்டல பகுதி பிரிட்டிஷாரின் முறையான வருவாய் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.


கோவை வட பகுதிகளுடன் சேலம் பகுதிகள் சில இணைக்கப்பட்டன.தென் பகுதி தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்பட்டது. 1804 ஆம் ஆண்டு கோவை மாவட்டமாக உருவானது. 1866ஆம் ஆண்டு நகராட்சியானது. அப்போதைய மக்கள் தொகை 24,000 ஆகும். அதன் பிறகு வளர்ச்சி பெற்று 01.05.1951 ஆம் ஆண்டு மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது மக்கள் தொகை 9,13,474 ( 2001ல் கணக்கெடுப்பு) தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றி பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.


கோவை மாநகர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேற்கில் பாலக்காட்டு கணவாய்க்கும், வடக்கிலுள்ள சகல்கட்டி கணவாய்க்கும் இடையில் அமைந்திருப்பதால் நீண்டகாலம் தொ ட்டு, இந்நகர் சரித்திர முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது. மதுரையை ஆண்டு வந்த நாயக்க மன்னர்கள் கோவையை கைப்பற்றி படைத்தளம் அமைத்தனர். பின்னர் மைசூர் மன்னர்கள் இதை கைப்பற்றிக் காண்டனர். ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் ஆங்கிலேயருடன் பலமுறை போர் செய்தனர். இதனால் இப்பகுதி அடிக்கடி கைமாறிக் காண்டே இருந்தது. 1768ல் ஆங்கிலேயர்கள் கோவையை கைப்பற்றி இழந்தனர். 1783ல் மீண்டும் இதுவே நிகழ்ந்தது. 1790ல் 5 மாத காலம் இப்பகுதியை முற்றுகையிட்ட திப்பு சுல்தான் ஆங்கிலேயரிடமிருந்து இதை கைப்பற்றிக் கொண்டார். 1799ல் நடந்த மைசூர் போரில் திப்புவை வென்று கோவையை கைப்பற்றிக் கொண்ட ஆங்கிலேயர்கள் அதனை 1947 வரை அரசு புரிந்தனர். திப்பு இறந்ததும் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்ஹெசி பிரவு உடனடி நடவடிக்கையில் இறங்கினார் . திப்புவின் வாரிசுகளுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு அரசு உரிமை பறிக்கப்பட்டது. பழைய அரச குடும்பத்தினரான கிருஷ்ண ராஜ உடையாரிடம் மைசூரை ஆளும் உரிமையை ஒப்படைத்த ஆங்கிலேயர்கள் கன்னடம், வயநாடு, கோயம்புத்தூர், ஈரோடு,தாராபுரம், ஆகிய பகுதிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். ஹைதராபாத் நிஜாமுக்கு ஊட்டி குர்ரம் கொண்ட ஆகிய பகுதிகள் தரப்பட்டன. இந்த பிரிவினைகளால் கோவை பிரிட்டீஸ் ஆட்சியின் கீழ் வந்தது. அப்பாது மாவட்டத்தின் பரப்பளவு அதிகமாக இருந்த்தால் 1799ம் ஆண்டு கோவை பகுதி இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.


தொடக்கத்தில் கோயம்புத்தூர் வருவாய் நிர்வாகத்திற்கு ஏற்ப இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது.1804ல் பிரிக்கப்பட்ட இப்பகுதிகள் ஒரு மாவட்ட ஆட்சியரின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. அப்போது திரு. ஹேச்.எஸ்.கிரிம் (பொ) 20.10.1803 லிருந்து 20.01.1805 ஆண்டு வரை இம்மாவட்ட ஆட்சியராக பொறுப்பிலிருந்தார். 1868ல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த நுற்றாண்டின் தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் 10 வருவாய் வட்டங்கள் இருந்தது. அவைகள் பின்வருமாறு: பவானி, கோயம்புத்தூர், தாராபுரம், ஈரோடு , கரூர் கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம்,உடுமலைப்பேட்டை. சத்தியமங்கலம் என்னும் வருவாய் வட்டம் பின்னர் கோபிச்செட்டிபாளையம் என்னும் பெயர் மாற்றப்பட்டது. அவினாசி வருவாய் வட்டம, கரூர் வருவாய் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட போது உருவாக்கப்பட்டது. 1927ல் பவானி வருவாய் வட்டத்தின் சில கிராமங்களும் சேலம் மாவட்டத்தில் சில கிராமங்களும் மேட்டூர் பகுதிகளோடு இணைக்கப்பட்டது. ஆனால் 1929ல் இந்த பகுதிகள் சேலம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. மீண்டும், 1956ல் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய பகுதியான கொள்ளேகால் வருவாய் வட்டம் முழுவதும் மைசூர் மாநிலத்திற்கு, மாநில சீரமைப்பு திட்டத்தின் போது மாற்றப்பட்டது. 1975ல் சத்திய மங்கலம் துணை வருவாய் வட்டம் நன்கு வளர்ச்சியடைந்த வருவாய் வட்டமாக தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும் 1979ல் பெருந்துறை துணை வருவாய் வட்டம் ஈரோட்டிலும், அவினாசி துணை வருவாய் வட்டம் மேட்டுப்பாளையத்திலும் சிறப்பு வருவாய் வட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் மொத்த வருவாய் வட்டங்கள் இந்த மாவட்டத்தில் 12 ஆக உயர்ந்தது,இது நீண்ட நாட்கள் நீடித்து இருக்கவில்லை. 1979ல் 6 வருவாய் வட்டங்கள் இம்மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக ஈரோடு மாவட்டம் அரசு ஆணை நிலை என் 1917ன் படி வருவாய் துறை தேதி:31.08.1979, பின்வரும் 6 வருவாய் வட்டங்கள் பவானி, கோபிச் செட்டிபாளையம், சத்தியமங்கலம்,ஈரோடு, பெருந்துறை, மற்றும் தாராபுரம் கோவை மாவட்டத்திலிருந்து பிரித்து புதிய ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அச்சமயம் கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு முன்பு 9 வருவாய் வட்டங்களை கொண்டிருந்தது. அவைகள் பின்வருமாறு கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம்,அவிநாசி, பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் வால்பாறை. அரசு ஆணை நிலை என் 617,618ல் வருவாய் துறை தேதி 24.10.2008 கோவை மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்கள் அதாவது (திருப்பூர்,உடுமலைப்பேட்டை,பல்லடம் மற்றும் அவினாசி பகுதி) மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய் வட்டங்கள் அதாவது (தாராபுரம், காங்கேயம்,பெருந்துறை பகுதிகள்) ஆகியன பிரிக்கப்பட்டு திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இப்பொழுது கோவை மாவட்டத்தில் 8 வருவாய் வட்டங்கள் உள்ளன. அவைகள் பின்வருமாறு : கோவை வடக்கு, கோவை தெற்கு,மேட்டுப்பாளையம்,சூலூர் ,பொள்ளாச்சி,அன்னூர், கிணத்துககடவு மற்றும் வால்பாறை. இரண்டு. மண்டலங்கள் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி 
HISTORY

Originally Coimbatore district formed part of the Kongu country, the history of which dates back to the Sangam age. It is found that in early days the area was inhabited by tribes, the most predominant among them being the Kosars who are reported to have had their headquarters at Kosampathur which probably later became the present Coimbatore. However, tribal predominance did not last long as they were over-run by the Rashtra Kutas. From Rashtrakutas the region fell into the hands of the Cholas who were in prominence at the time of Raja Raja Chola. On the decline of Cholas the Kongu territory was occupied by the Chalukyas and then by the Pandyas and the cysalas. Due to internal strife in the Pandyan kingdom the Muslim rulers from Delhi happened to interfere. Thus the area fell into the hands of Madurai Sultanate from whom the Vijayanagar rulers wrestled for the region during 1377-78 after overthrowing the Madurai Sultanate. For a few years the area remained under independent control of Madurai Nayaks. 

During the period of Muthu Veerappa Nayak and later during the period of Tirumal Nayak internal strife and intermittent wars ruined the kingdom. As a consequence during the period of Tirumal Nayak, the Kongu region fell into the hands of the Mysore rulers from whom hyder Ali took over the area. However, consequent on the fall of Tippu Sultan of Mysore in 1799, the Kongu region came to be ceded to the East India Company by the Maharaja of Mysore who was restored to power by the East India Company after defeating Tippu Sultan. From then till 1947 when India attained Independence, the region remained under British control who initiated systematic revenue administration in the area.

To begin with, Coimbatore was in two parts for purposes of revenue administration. In 1804, the areas were merged into one and brought under one District Collector.During that time, Mr.H.S.GREAME,[I/C] from 20/10/1803 to 20/01/1805 was the Collector. In 1868, the Nilgiris District was bifurcated from the Coimbatore District. At the opening of the present century there were ten taluks in the district viz., Bhavani, Coimbatore, Dharapuram, Erode, Karur, Kollegal, Palladam, Pollachi, Satyamangalam and Udumalaipettai. The name of Satyamangalam taluk was subsequently changed as Gopichettipalaiyam. Avinashi taluk was formed in the year Karur taluk happened to be transferred to Tiruchirappalli district. In 1927, some villages of Bhavani taluk together with a few villages from Salem district were constituted into Mettur Area but very soon i.e. in 1929, this area was transferred to Salem district. Again in the year 1956 considerable area of the district, viz., the whole of Kollegal taluk was transferred to Mysore State as part of the States Re-organisation Scheme. In 1975, Satyamangalam sub-taluk was upgraded as a full fledged taluk. Again in 1979, Perundurai sub-taluk of Erode and Mettuppalaiyam sub-taluk of Avanashi were also upgraded into independent taluks. Thus the total number of taluks in the district came to twelve. This, however, did not last long. In the same year (1979) six taluks were bifurcated from the district to constitute a new district viz., Erode. Under G.O. Ms. No. 1917 Revenue dt. 31-8-79, Government of Tamil Nadu the following six taluks were bifurcated from the then Coimbatore district to form Erode district. Bhavani, Gopichettipalaiyam, Satyamangalam, Erode, Perundurai and Dharapuram. That time Coimbatore contains nine taluks before bifurication of Tiruppur as a seperate District viz. Coimbatore(North), Coimbatore(South), Mettuppalayam, Avanashi, Palladam,Tirupur, Pollachi, Udumalpettai and Valparai. As per G.O.Ms. No. 617, 618 Revenue dt 24.10.2008, Government of Tamil Nadu the four taluks from Coimbatore District (i.e. Tiruppur, Udumalpet, Palladam and Avinashi(Part)) and three taluks from Erode districts (i.e.Dharapuram, Kangeyam and Perundurai (Part)) were bifurcated and formed another new District as Tiruppur District. Now Coimbatore District has only two revenue divisions of Coimbatore and Pollachi and contains eight taluks namely Coimbatore(North), Coimbatore(South), Mettupalayam, Annur, Sulur, Kinathukadavu, Pollachi and Valparai. This bifurcation considerably reduced the size of the present Coimbatore district.

Courtesy : http://sstaweb.blogspot.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி