GATE - 2014 நுழைவுத் தேர்வு அறிவிப்பு.


கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்(GATE) எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு 2014 பிப்ரவரியில்துவங்கி மார்ச் வரை நடைபெறுகிறது.இந்தியன் இன்ஸ்ட்டிடியட் ஆப் சயின்ஸ் மற்றும் எழு தொழில் நுட்ப மையங்களிலும் பொறியியல் படிப்புகளில் சேர கேட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

கல்வித்தகுதி:

இளநிலையில் இன்ஜினியரிங், டெக்னாலஜி, ஆர்க்கிடெக்நர், பார்மசி படிப்பு அல்லது முதுகலை பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.பி.எஸ்., முதுகலை பட்டயப் படிப்பு இறுதியாண்டு தேர்வெழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.முதுகலையில் (அறிவியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல்) தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு தேர்வெழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.இன்ஜினியரிங், டெக்னாலஜி பிரிவில் 4 வருட ஒருங்கிணைந்த முதுகலைபட்டப் படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.5 வருட ஒருங்கிணைந்த முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1500ம், மாணவிகளுக்கு ரூ,750ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்:

செப்டம்பர் 2ம் தேதி முதல் விண்ணப்ப படிவங்கனை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அக்டோபர் 3 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள். கேட் தேர்வு பிப்ரவரி 1, 2014 முதல் மார்ச் 2 வரை நடைபெறுகிறது.கூடுதல் தகவல்களுக்கு gate.iitkgp.ac.in/gate2014 என்ற வலைதளத்தை பார்க்கலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி