கணித பாடம் கற்க இலவச மென்பொருள்


கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது பரீட்சையை எதிர்கொள்ள முடியும். ஆனால் கணிதபாடம் அவ்வாறு இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால் கசக்கும்; இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல  இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழிசெய்கின்றன.


அந்த வகையில் மென்பொருள் உருவாக்கத்தில் கொடிகட்டி பறக்கும் MICRO SOFT மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள வகையில் இலவசமாக MICRO SOFT MATHEMATICS மென்பொருளை வெளியிட்டுள்ளது.


இதன் சிறப்பு 
கணித பாடத்தின் அடிப்படை கணிதம், எண்கணிதம்,திரிகோணகணிதம்  வரைபு , புள்ளிவிபரம் என முழு பாட அலகினையும் கொண்டுள்ளது.மிக இலகுவாக கையாள கூடிய வசதி உள்ளது அத்துடன் வினாக்களுக்கான விடையினை படிமுறை படிமுறையாக தருகிறது. கணித குறியீடுகள் மற்றும் அளவீடுகைளை பயன்படுத்த சிறிய விசைப்பலகை உண்டு. வரைபினை வரைய தேவையான சகல வசதியும் உள்ளன. அளவீடுகளை மாறிக்கொள்ளும் வசதி உண்டு;இந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்பட வல்லது.




தரவிறக்க : Microsoft Mathematics 4


Courtesy : http://taakkootani.blogspot.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி