புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரம்:
* முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, அதற்குமேல் ஒவ்வொரு கி.மீட்டருக்கு கட்டணம் ரூ.12 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 சதவீதம் இரவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
* காத்திருப்பு கட்டணம், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50 காசு என்ற வீதத்தில், ஒரு மணி நேரத்துக்கு ரூ.42 நிர்ணயம் செய்யப்படும்.
இந்த திருத்திய கட்டணம், இன்று முதல் நடைமுறைக்கு வரும். இதன் அடிப்படையில் பயணிகளிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும். திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை வரும் 15,ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது வட்டார போக்குவரத்து அலுவலகத்தினால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்தில் இருந்து ஆட்டோ டிரைவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்டோபர் 15,ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.