"தற்போது இருக்கும் வரலாற்றுப் பாடங்கள் நடைமுறை வாழ்கைக்கு உதவுவதில்லை"

"தற்போது இருக்கும் வரலாற்றுப் பாடங்கள் நடைமுறை வாழ்கைக்கு உதவுவதில்லை"


"நாம் படித்த வரலாற்றுப் பாடங்கள், நம் நடைமுறை வாழ்கைக்கு உதவுவதில்லை" என்று பாரதிதாசன் பல்கலை., வரலாற்றுத் துறை தலைவர் டாக்டர். ராஜேந்திரன் பேசினார்.

சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் "உலகப்போர்களுக்கிடையே சென்னை நகரம்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு துறை சார்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்கள்.

முதல் நாளான நேற்று கருத்தரங்கங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் குணசேகரன், சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் வெங்கட்ராமன், பாரதிதாசன் பல்கலை வரலாற்றுத்துறை தலைவர் ராஜேந்திரன் மற்றும் வரலாற்று ஆய்வாளர் நரசய்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் ஐ.சி.எச்.ஆர். உறுப்பினரும், பாரதிதாசன் பல்கலையின் வரலாற்றுத்துறை தலைவருமான ராஜேந்திரன் பேசியதாவது:

"சென்னையின் வரலாறு ஒரு சிறு பகுதியில் இருந்து ஆரம்பித்து திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் என ஒவ்வொரு ஊர்களையும் தன்னோடு இணைத்து விரிவடைந்து இருக்கிறது. சென்னையின் வரலாறு ஓரளவு நமக்குத் தெரிகிறது. இதற்கு முன்பாக சென்னையை மெட்ராஸ் என்று அழைத்து வந்தோம். மெட்ராஸ் எனப் பெயர் வருவதற்கு, காரணம் என்ன என்று கேட்டால், யாருக்கும் தெரிவதில்லை.

நமது வரலாற்றை நாம் அறிய, ஐரோப்பியர்களால் எழுதப்பட்ட வரலாற்றை பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வரலாற்றை ஒரு வரைமுறைக்குள்ளாக வைத்து கற்றுக்கொள்வது தவறு. அனைத்து விதமான கோணங்களிலும் வரலாற்றைப் படிக்க வேண்டும்.

நாம் படித்த வரலாற்றுப் பாடங்கள், நம் நடைமுறை வாழ்கைக்கு உதவுவதில்லை. நடைமுறை வாழ்க்கையோடு ஒன்றிய பாடங்களால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். இதற்கு வரலாற்று பாடத்திட்டங்களில் மாற்றம் வேண்டும்." என்றார்.

தொடர்ந்து இன்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. கருத்தரங்கில் பேராசிரியர்கள், வரலாற்றுத் துறை மாணவர்கள், ஆய்வு மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கருத்தரங்க ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர், வரலாற்றுத் துறைத் தலைவர் நாகேஸ்வர ராவ் ஆகியோர் செய்திருந்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி