டி.ஆர்.பி., புதிய தலைவராக பதவியேற்றார் விபு நய்யார்


டி.ஆர்.பி., புதிய தலைவராக, விபு நய்யார், பதவியேற்றார். டி.ஆர்.பி., தலைவர் பதவியில், இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, தேசிய சிறுபான்மை ஆணையத்தின் செயலராக நியமிக்கப்பட்டார்.


இதையடுத்து, நேற்று முன்தினம், டி.ஆர்.பி., பதவியில் இருந்து, விடை பெற்றார். இவரது காலத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறைந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு, ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்ற டி.இ.டி., தேர்வை, வெற்றிகரமாக நடத்தினார்.


இரு டி.இ.டி., தேர்வுகள், முதுகலை ஆசிரியர் தேர்வு உட்பட, பல வகையான தேர்வுகளை, வெற்றிகரமாக நடத்தினார். டி.ஆர்.பி., புதிய தலைவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விபு நய்யார், நேற்று முன்தினம், பதவி ஏற்றுக் கொண்டார்.


வரும், 17, 18ம் தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வு, புதிய தலைவர் மேற்பார்வையில் நடக்க உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி