மறுகூட்டல் கட்டண ரசீதை சமர்ப்பிக்க வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், அதற்கான கட்டணம் செலுத்திய ரசீதை, செப்., 2ம் தேதிக்குள், தேர்வுத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை வலியுறுத்தி உள்ளது.

தேர்வுத்துறை அறிவிப்பு: கடந்த பொதுத் தேர்வுக்குப்பின் நடந்த உடனடித் தேர்வில் பங்கேற்று, அதன்பின், விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் விண்ணப்பித்த, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், அதற்குரிய கட்டண செலானை, தேர்வுத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை, கட்டண ரசீதை சமர்ப்பிக்காத தேர்வர்கள், "கூடுதல் செயலர் (மேல்நிலை), தேர்வுத்துறை இயக்குனரகம், சென்னை-6" என்ற முகவரியில், நேரிலோ, தபால் மூலமோ, செப்., 2ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். கட்டண ரசீதை சமர்ப்பிக்காத தேர்வர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கப்படாது; மறுகூட்டல் முடிவும், வெளியிடப்படாது. இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி