அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படாது என மத்திய அரசு உறுதி.

மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், "எந்த சூழ்நிலையிலும், அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவேண்டாம்' என, ஆறாவது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. சம்பள கமிஷனின் இந்த பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது.ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள், 2006, ஜனவரி மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது. அடுத்த சம்பள கமிஷன் குறித்து, இப்போது எந்த பதிலும் கூற முடியாது. ஒரு சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் தான், அடுத்த சம்பள கமிஷன் அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும். இவ்வாறு,அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி