சிபிஎஸ்சி புதிய உத்தரவு : சி.பி.எஸ்.சி பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை .

சி.பி.எஸ்.சி எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்ற அறிவிப்பால் அதிக சி.பி.எஸ்.இ பள்ளிகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழைப் பெற தேவையில்லை என்ற சுற்றறிக்கை கடந்த ஜூலை 8-ஆம் தேதி சி.பி.எஸ்.இ மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பள்ளி சி.பி.எஸ்.சி பள்ளியாக மாறுவதற்கு சம்பந்தப்பட்ட மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.சி பள்ளியாக மாற்றப்படுவதற்கு ஆட்சேபனை எழும் பட்சத்தில் மட்டும், மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் கொண்ட தனியார் பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை பெற வேண்டியது கட்டாயம் என்ற நிலை இந்த புதிய அறிவிப்பால் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி