அச்சம் தவிர் !இன்று ஆசிரியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இரண்டு விசயங்களில்

அச்சம் தவிர்
இன்று ஆசிரியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இரண்டு விசயங்களில்

1. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம்.
2. தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை கைவிடுதல்.

இந்த இரண்டு விசயங்கள் நிறைவேறினால் ஒரளவு ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறையும். இதை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அனைவரும் புரிந்து வைத்துள்ளார்கள். இதை பெறுவற்கான வழிதான் கூட்டுப்போராட்டம். இதை முன்னெடுக்கும் சங்கங்களை சிலர் இழித்தும், பழித்தும் பேசுவது என்பது கோரிக்கைகளை ஊனப்படுத்தும் செயல். இன்றைய சூழலில் பெண் ஆசிரியர்களை அதிகம் கொண்டுள்ள இத்துறையில் அவர்களை போராட்ட களத்திற்கு அழைத்து வருவது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். இன்றைய பாதிப்புக்குள்ளான ஆசிரியர்கள் பொரும்பாலோர் போராடினால் பாதிப்பு வருமா? என்ற ஐயநிலையுடன் உள்ளனர்.
ஒரு ஜனநாயக நாட்டில் நமக்கான உரிமைகளை பெறுவதற்கு போராட்டத்தை தவிர்த்து வேறு வழியில்லை. போராட்ட நடவடிக்கைகள் வேண்டுமானால் வடிவம் மாறலாம் ஆனால் நம் முன்னோடிகள் போராடாமல் எதையுமே பெற்றதில்லை என்பதுதான் வரலாறு. எல்லா இயக்கங்களுமே அது அரசியல் இயக்கமாக இருந்தாலும் அல்லது ஊழியர் சங்கமாக இருந்தாலும் சரி அதற்கான உரிமையை போரடிதான் பெறுகின்றனர். இதில் யாரும் விதிவிலக்கல்ல. அப்படியிருக்கையில் உங்களிடம் உள்ள பய உணர்வை முதலில் தூக்கி எறியுங்கள்.
ஒரு கை ஓசை என்பது சத்தமில்லாதது. பல கை ஓசை என்பது பாதிக்கப்பட்ட இனத்தையே அடையாளம் காட்டுவது.
ஓன்றுபட்ட போராட்டத்திற்கு வரத்தயங்கும் இயக்கங்கள் இடைநிலை ஆசிரியர்களை மீண்டும் அடகு வைக்க தயாராகிவிட்ட வியபாரிகள். அவர்களிடம் இருந்து நம் இனத்தை காப்பது நமது ஒவ்வொருத்தரின் கடமையாகும். நீங்கள் எந்த இயக்கமாக வேண்டுமானாலும் இருங்கள். அந்த இயக்கத்திற்கு உண்மையாக இருங்கள். நீங்கள் சார்ந்துள்ள இயக்க தலைமையை கூட்டு போராட்டத்திற்கு தூண்டுங்கள். இடைநிலை ஆசிரியரின் பாதிப்புக்களை இன்று மீட்டெடுக்கவில்லையென்றால் வருங்காலத்தில் மீள்வது கடினம். வருங்காலத்தில் மிகப்பெரிய ஊதிய இழப்பை சந்திக்க நேரிடும். எங்கே தடுமாற்றம், ஏன் தடுமாற்றம் என்பதை சிந்தியுங்கள். கடந்தகால கூட்டுப்போராட்டத்தில் நடந்தவைகளை மறந்து மீண்டும் ஒரு உரிமை மீட்பு போருக்கு தயாராகுங்கள். உறப்பினர்களும் தங்களிடம் உள்ள அச்ச உணர்வை களைந்து கோரிக்கையை வென்றெடுக்கும் கோபத்தோடு களம் காண தயாராகுங்கள். மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் இனம் நம் இனம். நம்மை புறந்தள்ளி எந்த அரசியல் இயக்கமும் தமிழகத்தில் நடத்த இயலாது.
நம் பலம் என்ன என்பதை உணருங்கள்.
நம்மிடம் உள்ள ஏற்ற தாழ்வுகளை களைந்து
கோரிக்கைகளை வென்றெடுக்க கோடிக்கைகளை உயர்த்துவோம்.

''விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படி செலும் உடல்கேட்டேன்
நசையுறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
------------ பாரதியார் ------------

Thanks to Mr.Muthupandiyan
Source : http://taakkootani.blogspot.in

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி