குரூப்-4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள்:

வரும் 25ம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, டிப்ஸ்...

* தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்காமல், படித்த பாடங்களை திரும்பவும் படியுங்கள்.


* புதிய தேர்வு முறையில், ஆப்டிடியூட் பகுதியில் 25 வினாக்கள் கேட்கப்படுகிறது. எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், கனஅளவு பகுதி சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.


* வரலாறு பாடத்தில் உள்ள காலவரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்ற காலம் வரையான போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்களை தெரிந்திருக்க வேண்டும்.


* உலகை வலம் வந்த பயணிகள், அவர்களின் இந்திய வருகையின் போது இருந்த மன்னர்கள், வரலாற்று நூல்கள், நூலாசிரியர்,பத்திரிகைகள், சமய சீர்திருத்த இயக்கம் இவற்றை படிக்கவும்.


* இயற்பியல் பகுதியில் அலகு, விதிகள், அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், அளவிடும் கருவிகள், பயன்கள், மதிப்புகளை பார்க்கவும்.


* வேதியியல் பகுதியில் வேதிப்பெயர், சமன்பாடு, முக்கிய அமிலங்கள், தனிம வரிசை அட்டவணை சிறப்பம்சம், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வேதிச் சேர்மங்களை படிக்க வேண்டும்.


* தாவரவியல் பகுதியில் செல்லின் அமைப்பு, தாவர, விலங்கு செல்களில் உள்ள நுண்ணுறுப்பின் பணி, தாவர பாகம், வளர்ச்சி தொடர்புடைய காரணிகள், வைரஸ், பாக்டீரியாவில் ஏற்படும் தாவர நோய்களை பட்டியலிடவும்.


* வகைபாட்டின் வளர்ச்சி, முதுகு நாணற்றவை தொகுதி,உதாரணங்கள் அறிவியல் பெயர், குரோமோசோம் நிலையை படிக்கவும்.


* மனித உடலியல் பகுதியில் ரத்தவகை, ரத்த செல்களின் சிறப்பம்சம், இருதய அமைப்பு, செயல்படும் விதம், நாளமில்லா சுரப்பி பண்பு, பயன், விட்டமின் பற்றிய தகவல்கள், எலும்புகளின் எண்ணிக்கை, மூளையின் அமைப்பு, பணி, வைரஸ், பாக்டீரியா,புரோட்டோசோவா, பூஞ்சையால் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ளவும்.


* புவியியல் பகுதியில் மாநில தலைநகரம், மலை, காடு,சரணாலயம் படிக்கவும்.


* சூரியன், அக்குடும்ப கோள்கள், அட்சரேகை, தீர்த்தரேகை சிறப்பம்சங்கள், வானிலை, காலநிலை, கடல் நீரோட்டங்கள்.


* நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, கடற்கோள், நிலச்சரிவு,பனிப்பாறை வீழ்ச்சி.


* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வளர்ச்சி, அட்டவணை,முக்கிய ஷரத்து, சட்ட திருத்தம், ஜனாதிபதி, பிரதமர், தேர்தல் ஆணையம் குறித்த தகவல்களை படிக்கவும்.


* பொருளாதார கோட்பாடுகளை கூறியவர்களின் பெயர்கள்.


* பொதுத் தமிழ் பாடப்பகுதிக்கு சமச்சீர் பாடப்புத்தகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையான புத்தகங்களை படிக்க வேண்டும். ஹால் டிக்கெட், நீலம் அல்லது கருப்பு நிற "பால் பாயின்ட்" பேனா கொண்டு செல்ல வேண்டும்.


*தேர்வுக்கு முதல்நாள் இரவு நன்கு தூங்கவும். மையத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே செல்லவும். மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100வினாக்கள், ஆப்டிடியூட் உட்பட பொதுஅறிவு பகுதியில் 100 என,மொத்தம் 200 வினாக்கள்.


*அனைத்து கேள்விகளுக்கும் நான்கு வினாக்கள் தரப்பட்டிருக்கும். தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை. எனவே,அனைத்து வினாக்களுக்கும் கவனமாக படித்து, விடை அளிக்கவும்



*தன்னம்பிக்கையுடன் கூடிய பயிற்சியும், முயற்சியுமே வெற்றியைத் தரும். வெற்றி பெற்று அரசு ஊழியராக வாழ்த்துக்கள்!

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி