ராதாகிருஷ்ணன் விருதுக்கு 360 ஆசிரியர் இன்று தேர்வு

"ராதாகிருஷ்ணன் விருது'க்கு, தகுதி வாய்ந்த 360 ஆசிரியரை தேர்வு செய்ய,பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில தேர்வுக் குழு,இன்று, சென்னையில் கூடுகிறது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி, சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்து, தமிழக அரசு, "ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி வருகிறது. விருது, 5,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, அரசுவழங்குகிறது.

மாநிலத்தில், 64 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பள்ளி கல்வித் துறை தரப்பில், ஒரு கல்வி மாவட்டத்திற்கு, இருவர் வீதமும், தொடக்க கல்வித் துறையில், ஒரு கல்வி மாவட்டத்திற்கு, மூன்று பேர் வீதமும், தகுதி வாய்ந்த ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட வேறு சில துறைகளில் இருந்தும், தகுதி வாய்ந்த ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்தத்தில், 360 ஆசிரியர்களுக்கு, வரும் செப்., 5ம் தேதி, விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில், அதிகாரிகள் பரிந்துரை செய்து அனுப்பியுள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய,பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில தேர்வுக் குழு,இன்று, சென்னையில் கூடுகிறது . மாநிலக் குழு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, 360ஆசிரியரை, தேர்வு செய்ய உள்ளது. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, இந்த வார இறுதிக்குள், அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.செப்., 5ம் தேதி மாலை, சென்னை,சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில் நடக்கும் விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன், விருதுகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வித் துறை,மும்முரமாக செய்து வருகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி