எம்.எட்., தேர்வு முடிவுகள் 26ம் தேதி வெளியீடு.

எம்.எட்., தேர்வு முடிவு, நாளை (26ம் தேதி), ஆசிரியர்கல்வியியல் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மணிவண்ணன், நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பல்கலையின் இணைப்பு பெற்ற கல்வியியல் கல்லூரிகளில், கடந்த மே, ஜூன் மாதங்களில், எம்.எட்., தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு, நாளை(26ம் தேதி), www.tnteu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.தேர்வு முடிவு குறித்த தொகுப்பு பட்டியல், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்ச்சி சான்றிதழ், செப்., 2ம் தேதிக்குப் பின், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் வழங்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெறவும், உரிய விண்ணப்பங்களில், செப்., 5ம் தேதிக்குள், "தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, சென்னை - 5" என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, பல்கலை இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி