தொலைக் கல்வியில் பி.எட்.,

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், தொலைக்கல்வியில் பி.எட்., படிப்புக்கான அட்மிஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு ஆக., 25ம் தேதி நடக்கிறது.
தமிழ், ஆங்கிலம், வரலாறு கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
தகுதிகள்
இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் நிரந்தரம் அல்லது தற்காலிகமாக 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நேரடியாக கல்லூரியில் பி.எட்., படிப்புக்கு கால அளவு 1 வருடம்.
தொலைநிலைக் கல்வியில் இது 2 ஆண்டு படிப்பு.
விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 2013, ஜூலை 26.
விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பம் கிடைக்கும் இடம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி