மதிப்பிற்குரிய பெற்றோர்களே தனியார் பள்ளியில் படித்தால் தான் நம் பிள்ளை நல்ல மதிப்பெண் பெறுவான் என்ற தவறான உங்களது என்னத்தை இனிமேலாகிலும் கைவிடுங்கள் நம் பிள்ளைகள் நன்றாக படித்ததால் தான் மதிப்பெண் பெற முடியுமே அல்லாமல் பள்ளிகளால் மட்டும் அல்ல என்று மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
இதோ அந்த சாதனை படைத்த பள்ளியின் ஆசிரியர்களுக்கு முதலில் நம் பாராட்டுக்களைத் தலை வணங்கி தெரிவிப்போம்
இதோ அந்த சாதனைப் பள்ளிகள்
497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவியின் பெயர் தேவி ஸ்ரீ பள்ளியின் பெயர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூர், சேலம்
496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவி பெயர் தீபிகா பள்ளியின் பெயர் அரசு பள்ளி, வேடசந்தூர், திண்டுக்கல்
அரசுப் பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டிய இந்த மாணவிகளுக்கும் இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
நண்பர்களுக்காக
நாம் நம் பிள்ளைகளை தனியார் பள்ளியில் பல ஆயிரங்களைக் கொடுத்து செலவு செய்து சேர்த்து படிக்க வைக்க விரும்புகின்றோம் ஆனால் நாம் சில ஆயிரங்கள் செலவு செய்து அரசுப் பள்ளி அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய உதவி அந்தப் பள்ளியிலேயே நம் பிள்ளைகளை சேர்க்க முயற்ச்சித்தால் அரசுப் பள்ளிகளின் தரம் மேலும் உயருமே செய்வோமா?
இப்படி ஒரு சாதனை நிகழ்த்த ஒரு இளைஞர் கூட்டம் தயாராகிவிட்டது. நான் இந்தப் பதிவை எழுத திட்டமிட்டபோதே என்னே ஒரு அதிசயம் என்னை அலைபேசியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்புகொண்ட சுரேஷ் என்ற நண்பர் தானும் தன்னுடைய நண்பர்களும் சேந்து அவர்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் தான் சேர்த்து படிக்க வைப்பது என்று முடிவு செய்துள்ளதாக தெரியப்படுத்தினார். தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கு ஆகும் கட்டணம் முழுவதையும் அரசுப் பள்ளிகளின் தேவைக்கு பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்யப்போவதாகவும் தெரிவித்தார். ஒரு நிமிடம் நான் அசந்து போனேன் ஏனென்றால் அவர்கள் நினைத்தால் லட்சங்களைக் குடுத்து எந்த பள்ளியிலும் சேர்க்க முடியும் அனைவரும் ஐ டி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள். அவர்களை மனதார வாழ்த்தி என்னுடைய ஆலோசனைகளை. வழங்கியுள்ளேன். இது போன்ற எண்ணம் பலருக்கும் வர வாய்ப்பு ஏற்ப்படும் வண்ணம் அரசுப் பள்ளிகள் உயர நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்
Source : http://vitrustu.blogspot.in/