கல்வி உரிமை சட்டம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமை சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்அனைவருக்கும் வருமாறு:-
* 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் இலவசமாக தொடக்க கல்வி வழங்க வேண்டும்.
* மாநிலங்கள் அனைவருக்கும் கட்டாயமாக தொடக்க கல்வி வழங்குவதோடு, பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதுடன் நின்று விடாமல் அவர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவதையும் படிப்பை முடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
* மாணவர்களின் வயதுக்கு ஏற்ப சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
* ஒரு ஆசிரியருக்கு அதிகபட்சம் 30 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
* ஓர் ஆண்டில் குறைந்தபட்டம் 200 முதல் 250 நாட்கள் பள்ளிக்கூடம் இயங்க வேண்டும்.
* ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும்.
* ஒரு வாரத்தில் ஓர் ஆசிரியர் குறைந்தபட்சம் 45 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
* பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியரும், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு ஆசிரியரும் இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனியாக அறை ஒதுக்கவேண்டும்.
* பள்ளியில் போதிய குடிநீர் வசதி இருக்க வேண்டும். கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
* நூலகம், சமையல் அறை ஆகியவை இருக்க வேண்டும்.
* விளையாட்டு திடல் இருக்க வேண்டும்.
* பள்ளிக்கூடத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் இருக்க வேண்டும்.
* கல்வித்துறை நிபுணர்கள் மூலம் ஆசிரியர்களின் கல்வி தகுதி, வேலை விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
* தரமான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மேம்படுத்தப்படவேண்டும்.
* மாணவர்களின் வயது, கற்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப அனைத்து பள்ளிகளிலும் பாட திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
* மாணவர்களின் கல்வி திறனை ஆண்டு இறுதித் தேர்வின் மூலம் மதிப்பிடாமல், ஆண்டு முழுவதுமான அவர்கள் வெளிப்படுத்திய திறமையின் அடிப்படையில் மதிப்பிடவேண்டும்.