ஆசிரியர் தகுதித் தேர்வு : தமிழ் வினா-விடை.

தமிழகத்தில் ஜூலை 12ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் தற்போதுதமிழ் பாடத்திற்கான தொடர் மாதிரி வினா விடைகள்...
* தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை - கலிப்பா
* ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
* சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்

* தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை
* யசோதர காவியத்தின் ஆசிரியர் - வெண்ணாவலுடையார்
* உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்
"இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.
* 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்
* பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை - 11
* "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
* வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
* உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்
* திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்
* காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.
* மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் - பாண்டியர்
* தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.
* தொல்காப்பியம் - முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.
* தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது - அகப்பொருள்.
* பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
* நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்.
* சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி
* சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
* "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.
* தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
* புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
* மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா
* ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
* மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி
* சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து
* தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்
* இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
* இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்
* அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன
* தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்
* சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்
* காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
* காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை
* மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை
* மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள்
* மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள்
* மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா
* மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்
* தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்
* திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்
* சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) - மணிமேகலை
* சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
* வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்
* தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
* "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்
* "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை
* "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.
* "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.
* திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்
* தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ
* மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்
* தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
* சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.
* சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.
* சங்கங்கள் தமிழ் வளர்த்தன.
* களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
* களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
* களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
* பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
* பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி
* பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.
* மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை
* முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.
* தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
* உலா நூல்களுள் மிகப் பழமையைனது - திருக்கைலாய ஞான உலா
* தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா
* கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்
* ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
* திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்
* கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்
* தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி
* கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்
* "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
* "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி
* "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்
* திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
* பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
* கருடாம்சம் - பெரியாழ்வார்
* சுதர்சனம் - திருமழிசை
* களங்கம் - திருமங்கையாழ்வார்
* காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
* நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
* அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
* காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
* அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்
* சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
* பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு
* குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்
* பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
* திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்
* சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் - திருத்தக்கதேவர்
* அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்
* செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்
* சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது
* காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை
* ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது
* இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது
* புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்
* அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்
* முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
* மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை
* தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

Source : www.tnkalvi.com

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி