1,040 மையங்களில் டி.இ.டி. தேர்வு: ஹால் டிக்கெட் அனுப்பும் பணி துவக்கம்-19-06-2012


சென்னை: ஜூலை 12ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு, 1,040 மையங்களில் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்&' அனுப்பும் பணி, நேற்று முதல் துவங்கியது.
அரசு பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, டி.ஆர்.பி., (தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்) செய்து வருகிறது. கடந்த காலங்களில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு நடந்து வந்த நிலை மாறி, ஓராண்டாக, தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
பொதுவாக, 100, 200 மையங்களில் தான் தேர்வுகள் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வுக்கு, 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால், அதிகபட்சமாக, 1,040 மையங்களில் தேர்வு நடக்க இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும், 400 முதல் 500 பேர் வரை தேர்வெழுதுவர்; ஒரு அறையில் 20 பேர் வரை எழுதுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர்), 3 லட்சத்து, 4 ஆயிரத்து, 248 பேரும்; இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வை, 3 லட்சத்து, 51 ஆயிரத்து, 836 பேர் என, மொத்தம், 6 லட்சத்து, 56 ஆயிரத்து, 84 பேர் எழுதுகின்றனர். ஹால் டிக்கெட் தேர்வர்களுக்கு, நேற்று முதல் ஹால் டிக்கெட் அனுப்பப்படுகிறது.
முதலில், தென் மாவட்டங்களுக்கும், கடைசியாக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அனுப்பப்படும். 22ம் தேதிக்குள், அனைவருக்கும், ஹால் டிக்கெட் அனுப்பப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹால் டிக்கெட் பின்புறம், விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை குறிப்பிடாமல் இருந்தால், தேர்வு அறையில் தேர்வு செய்து, ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பதிவு செய்ய வேண்டும். இரண்டாம் தாள் தேர்வில், விருப்பப் பாடத்தை மாற்றி எழுதியிருந்தால், விடைத்தாளில் சரியாக எழுத வேண்டும் போன்ற முக்கிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட, அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் அமைப்புகள் நடத்தும் அனைத்து தேர்வுகளும், பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வு, வியாழக்கிழமை நடக்கிறது.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறும் போது, ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல்வேறு தேர்வுகளை நடத்த, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, வேறு வழியின்றி, வியாழக்கிழமை நடத்துகிறோம். ஆகஸ்டில் நடத்தினால், மேலும் கால தாமதம் ஏற்படும்&' என்றனர்.
டி.இ.டி., தேர்வுக்கு, "கீ-ஆன்சர்&' வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. விடைகளில் வரும் ஆட்சேபங்களைப் பார்த்த பின், இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிடவும் டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.
நன்றி : தினமலர் 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி