கல்வி மட்டுமே பழங்குடியின சமூகத்தினரை உலகறியச் செய்யும் என்கிறார் தாேடர் பழங்குடியினத்தில் இருந்து முதல் மருத்துவராகியுள்ள பாரதி.

கல்வி மட்டுமே பழங்குடியின சமூகத்தினரை உலகறியச் செய்யும் என்கிறார் தாேடர் பழங்குடியினத்தில் இருந்து முதல் மருத்துவராகியுள்ள பாரதி.

மேலும் தொடர்ந்து படிக்க>>

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் (Sukanya Samruddhi Yojana) 2019-ல் புதிய மாற்றங்கள் ஒரு பார்வை!

*செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் (Sukanya Samruddhi Yojana) 2019-ல் புதிய மாற்றங்கள் ஒரு பார்வை!*

      மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட சிறப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (Sukanya Samruddhi Yojana). இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் *செல்வ மகள் திட்டமாக* செயல்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும். மோடி அரசு சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் மோடி அரசினால் பெண் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் இது வரை 1 கோடிக்கும் அதிகமான கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கணக்கின் பழைய விதி முறைகளில் இருந்து சில விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் இங்குச் செல்வ மகள் திட்டத்தைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விதிமுறைகளை பார்ப்போம். 

*புதிய கணக்கைத் துவங்குதல்* - ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தக் கணக்கை துவங்க இயலும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் திறக்க இயலும். தகுதி இத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் இந்தப் பெண்குழந்தை பெண் குழந்தை கண்டிப்பாக இந்திய குடியுரிமை பெற்றி இருத்தல் வேண்டும். ஒருவேளை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது மற்றும் கணக்கை அத்துடன் உரியக் காலத்திற்கு முன்னரே மூடப்படும். காலம் கணக்கைத் திறப்பதில் இருந்து *15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய இயலும்*. இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதிகபட்ச முதலீடு 14 வருடங்களே இருந்தது குறிப்பிடத்தக்கது. கணக்கு துவங்கிய 21 வருடங்கள் முடிந்த பின் கணக்கை முடித்து பணம் பெறலாம். முதலீட்டு முறை பணம் மற்றும் செக் வாயிலாக பணம் செலுத்தும் முறை மட்டும் இல்லாமல் நீங்கள் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் மைய வங்கித் தீர்வு இருந்தால் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம். வட்டி விகிதம் சிறு சேமிப்பு திட்டம் போல செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக் கொண்டே வரும். 2019 ஜனவரி 1 முதல் 8.5 சதவித வட்டி வழங்கப்படுகிறது. இந்தக் கணக்குகளை துவங்க உள்ளவர்கள் எல்லா மாதமும் 10-ம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். தவறினால் வட்டி குறைந்துவிடும். முதலீட்டு அளவுகள் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும். ஏதேனும் அதிகப்படியான தொகையை டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்பப்பெறலாம்.

*கணக்கைத் தொடராத போது என்ன ஆகும்?* குறைந்தபட்ச தொகையான 250 ரூபாயை சரியாகச் செலுத்தவில்லை என்றால் 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான வருடத்திற்கு 4 சதவீதமாக மட்டுமே பெற இயலும். 

*இடை நிறுத்தப்பட்ட கணக்கை மீண்டும் துவங்குதல்*. கணக்கை இடை நிறுத்தப்பட்டு இருக்கும் போது 50 ரூபாயினை அபராதம் செலுத்தி விடுப்பட்ட கணக்கினை மீண்டும் துவங்கலாம். *வருமான வரி விலக்கு உண்டா?* செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் குழந்தைகள் பேரில் முதலீடு செய்யும் தொகைக்குப் பிரிவு 80சி-இன் கீழ் வரிவிலக்கைப் பெறலாம். முதிர்வு இந்தக் கணக்கு 21 ஆண்டுகள் ஆகும் போது அதன் முதிர்வு காலத்தை அடைந்துவிடும். தற்போதய வட்டி விகிதத்தின் படி மாதம் ரூபாய் 1000 - செலுத்தி வந்தால் 15 ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் தொகை ரூபாய் 1,80,000 .
21 ஆண்டுகள் கழித்து திரும்ப கிடைக்கும் தொகை (உத்தேசமாக) ரூபாய் 5,75,000. அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது. [ஆனால் செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது கணக்கை மூடும் வரை வட்டி அளிக்கப்படும் என்று இருந்தது.]

*கணக்கை இடமாற்றுதல்* கணக்கை வேறு வங்கிகளுக்கோ, அல்லது வேறு தபால் நிலைய கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் ரூ.100 கட்டணமாகச் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் வீடு மாற்றத்திற்கான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

*திரும்பப் பெறுதல்* முன்பு ஒருவர் 50 சதவீதம் வரை திரட்டப்பட்ட தொகையில் இருந்து 18 வயது நிரம்பியதற்கான சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்களை செலுத்தி செலவுக்காக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்போது எவ்வளவு தொகை கட்டணமாகச் செலுத்த வேண்டுமோ அதை மட்டுமே பெற இயலும். மொத்தமாக எடுக்க வேண்டும் என்றால் ஐந்து தவணையாக எடுத்துக்கொல்லலாம். திருமணத்தின் ஒரு மாதம் முன்பு அல்லது திருமணத்திற்கு மூன்று மாதத்திற்குப் பிறகு மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இதற்கு 18 வயது அடைந்ததற்கான சான்றிதழ் சமர்ப்பித்தல் வேண்டும்.

*முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுதல்* முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுதல் முன்பு எப்போது வேண்டும் என்றால் சாத்தியம். ஆனால் இப்போது குறைந்தது 5 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகே கணக்கை மூட இயலும். சில சமயங்களில் ஏதேனும் மருத்துவ உதவி, நோய், காப்பாளர் மரணம் - போன்ற சில காரணங்களின் போது முன்பாகவே பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளின் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும். 18 வயது நிரம்பி திருமணம் செய்தற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தின் கீழ் கணக்கை மூடிவிட்டு முதிர்வு தொகையினை பெற முடியும். மூடல் நேரத்தில் தேவைப்படும் ஆவணங்கள் கணக்கை மூடும் நேரத்தில் அடையாள அட்டை, வீட்டு முகவரி சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பித்தல் வேண்டும். 
 
*செல்வ மகள் திட்டம் எதனால் முக்கியம்?* முதலீடு செய்து சேமிப்பதற்கு மியூச்சுவல் ஃபண்ட் பொன்று நிறையப் பல திட்டங்கள் இருந்தாலும் செல்வ மகள் திட்டம் திட்டத்தில் எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லை என்பதே இதன் மிகப்பெரிய சாதகமாகும்.


தொகுப்பு : -
*M.ராஜேந்திரன், திண்டுக்கல்*
மேலும் தொடர்ந்து படிக்க>>

சிவில் சர்வீஸ் என்னென்ன புத்தகங்களை எல்லாம் படிக்கலாம்?

சிவில் சர்வீஸ் என்னென்ன புத்தகங்களை எல்லாம் படிக்கலாம்?
மேலும் தொடர்ந்து படிக்க>>

Employment News : 19-January To 25-January - 2019

Employment News : 19-January To 25-January - 2019
மேலும் தொடர்ந்து படிக்க>>

பி.பி.எப்., கணக்கை புதுப்பிப்பது எப்படி?

மேலும் தொடர்ந்து படிக்க>>

Employment News : 5-January To 11-January -2019

Employment News : 5-January To 11-January -2019
மேலும் தொடர்ந்து படிக்க>>

ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக Resignation Letter ஒருகடிதத்தை கொடுத்த பின்னர்அந்தக்கடிதத்தை பணிச்சுமையால் ஏற்பட்டமன அழுத்தத்தின் காரணமாககொடுத்து விட்டதாக கூறிதிரும்பப் பெறமுடியுமா?

ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக Resignation Letter ஒருகடிதத்தை கொடுத்த பின்னர்அந்தக்கடிதத்தை பணிச்சுமையால் ஏற்பட்டமன அழுத்தத்தின் காரணமாககொடுத்து விட்டதாக கூறிதிரும்பப் பெறமுடியுமா?
மேலும் தொடர்ந்து படிக்க>>

அமெரிக்க நாசா காலண்டரில் பழநி மாணவரின் ஓவியம்
திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த நடராஜன் - சந்திராமணியின் மகன் தேன்முகிலன். இவர் பழநி அருகே உள்ள வித்யாமந்திர் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதத்துக்கு ஒரு தலைப்பு கொடுத்து சர்வதேச அளவில் ஓவியப் போட்டிகளை நடத்துகிறது. இதில் தேர்வு செய்யப்படும் ஓவியங்கள், காலண்டரில் இடம்பெறும்.
2019-ம் ஆண்டு காலண்டருக்கான ஓவியங்களை தேர்வு செய்ய நடந்த போட்டியில் 194 நாடுகளைச் சேர்ந்த 4 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் இறுதியாக 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப் போட்டி யில் பங்கேற்றதில் தேன்முகிலனின் ‘விண்வெளியில் உணவு’ என்ற தலைப்பிலான ஓவியம் தேர்வு செய்யப் பட்டு நவம்பர் மாத காலண்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தொடர்ந்து படிக்க>>

Employment News : 22 -December To 28-December -2018

Employment News : 22 -December To 28-December -2018
மேலும் தொடர்ந்து படிக்க>>

தமிழில் தந்தி முறையை கண்டுபிடித்த போஸ்ட் மாஸ்டர் காலமானார்

தமிழில் தந்தி முறையை கண்டுபிடித்த போஸ்ட் மாஸ்டர் காலமானார்: அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று உடல் தானம்

மேலும் தொடர்ந்து படிக்க>>

அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்து பற்றிய கட்டுரை

அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை சரி என்பன குறித்து நான் அறிந்தவற்றையும், தமிழ் வளர்ச்சித் துறை பயிலரங்கில் தெரிந்துணர்ந்த சிலவற்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
மேலும் தொடர்ந்து படிக்க>>

டிசம்பர் 17, ஓய்வூதியர் தின நல்வாழ்த்துக்கள்.

டிசம்பர் 17, ஓய்வூதியர் தின நல்வாழ்த்துக்கள்.
மேலும் தொடர்ந்து படிக்க>>

SSC Exam Schedule (Computer Based Mode) of Various Exams 2018

The Staff Selection Commission (SSC) has finalized the dates for conducting three examinations in the Computer Based Mode, in the months of January and February, 2019 as given in the table below:-
மேலும் தொடர்ந்து படிக்க>>

Employment News : 15 -December To 21-December -2018

Employment News : 15 -December To 21-December -2018
மேலும் தொடர்ந்து படிக்க>>

Kendriya Vidyalaya Sangathan (KVS) PGT, TGT, PRT & Librarian Admit Card 2018

Kendriya Vidyalaya Sangathan (KVS) has published Admit Card for the post of PGT, TGT, PRT & Librarian 2018, Check below for more details.
மேலும் தொடர்ந்து படிக்க>>

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி